தலச்சிறப்பு |
பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து இறைவனை வணங்கிய தலமாதலால் 'திருவெண்டுறை' என்ற பெயர் பெற்றது. தற்போது 'திருவண்டுதுறை' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'வெண்டுறைநாதர்' என்னும் திருநாமத்துடன் அழகிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'வேல்நெடுங்கண்ணியம்மை' என்னும் திருநாமத்துடன் சிறிய வடிவில் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் மதாமோத விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நவக்கிரகங்கள், பைரவர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சூரியன், சந்திரன் ஆகிய சன்னதிகள் உள்ளன.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|